ADDED : ஏப் 23, 2024 02:40 AM

திருப்பூர்;கணியாம்பூண்டி ஊராட்சி வளர்ச்சிக்குழு தலைவர் ரஹீம் அங்குராஜ் கூறியதாவது:
பெரும்பாலான கிராம ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில், வீடு, கடைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் எரியூட்டப்படுவது, அதிகரிக்கிறது.
அவிநாசி, வேலாயுதம்பாளையம் ஊராட்சி உரக்குழியில் கொட்டப்படும் குப்பை, எரியூட்டப்படுவது தொடர் கதையாகிறது.அதேபோல், கணியாம்பூண்டி ஊராட்சி, ரோஸ் அவென்யூ பகுதியில், குப்பை தீயிட்டு கொளுத்தப்படுகிறது. இதனால், புகைமாசு ஏற்படுவதுடன், கோடை வெயில் சமயத்தில் இவ்வாறு, குப்பைக்கு தீ மூட்டுவதால், தீ பரவலுக்கும் அது வழி வகுக்கும்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், இதுபோன்று, குப்பைக்கு தீ மூட்டும் செயலை தவிர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

