/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனல் பறக்கப்போகும் இந்தியா - பாக்., போட்டி வெற்றி யார் பக்கம்; ரசிகர்கள் 'டென்சன்'
/
அனல் பறக்கப்போகும் இந்தியா - பாக்., போட்டி வெற்றி யார் பக்கம்; ரசிகர்கள் 'டென்சன்'
அனல் பறக்கப்போகும் இந்தியா - பாக்., போட்டி வெற்றி யார் பக்கம்; ரசிகர்கள் 'டென்சன்'
அனல் பறக்கப்போகும் இந்தியா - பாக்., போட்டி வெற்றி யார் பக்கம்; ரசிகர்கள் 'டென்சன்'
ADDED : ஜூன் 08, 2024 11:49 PM

'டி - 20' உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், பிரதானக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. அமெரிக்க அணி, பாகிஸ்தானை வென்றது வியப்பை ஏற்படுத்தியது. உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி இரவு, 8:00 மணிக்கு நடக்கவுள்ளது. யார் வெல்வர் என்ற எதிர்பார்ப்பு, இருக்கையின் நுனியில் ரசிகர்களை அமர வைக்கும். திருப்பூர் கிரிக்கெட் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்... பார்ப்போம்.
சிறந்த பேட்டிங் வரிசை
சுனில்குமார், ராயபுரம்: வெளிநாட்டு அணிகளுக்காக விளையாடும், நம் இந்திய வம்சாவளி வீரர்கள் அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதை பார்க்கும் போது, உலக கோப்பை தொடர் பெருமையாக உள்ளது. நடப்பு உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள பப்புவா நியூ கினியா நாட்டுக்கென தனி மொழி கூட இல்லை. வெற்றி, தோல்வி எல்லாம் அப்புறம். ஆனால், இப்படி ஒரு அணியை உருவாக்கி, உலக கோப்பை தொடருக்கு அழைத்து வந்ததே பெரிய விஷயம்; இந்த அணி தொடரில் பங்கேற்க வந்ததே பாராட்டுக்குரிய விஷயம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அணி கட்டாயம் ஜெயிக்கும். அர்ஷ்தீப் தடுமாறலாம். ரோஹித், கோலி, ஹர்திக் பண்டியா கட்டாயம் ரன் குவிப்பர். பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. தற்போதுள்ள, பேட்டிங் ஆர்டரே சரியானது. அதுவே, இன்றைய போட்டியில் தொடர வேண்டும்.
ஜெய்ஸ்வால் களமிறங்கணும்
மணி, காமராஜ் நகர்:
கிரிக்கெட் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது, 43 வயதில் உகாண்டா பந்துவீச்சாளர் பிராங்க் நுசுபுகா நான்கு ஓவர் வீசி, நான்கு ரன் மட்டும் கொடுத்து, இரண்டு விக்கெட் கைப்பற்றி, பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக உலக சாதனை படைத்திருக்கிறார்.
பாகிஸ்தானை விட பலம் வாய்ந்த அணியாக நாம் இருக்கிறோம். அதே நேரம், நியூயார்க் மைதானம், பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானம். நாம் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருக்கலாம்.
ரோஹித் கூட தடுமாறலாம். இன்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலை சேர்க்கலாம். ஒரு பேட்டர் அதிகமாகும்; ஜெய்ஸ்வால் பவுலிங்கும் செய்வர். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்கினால், ஆறு பவுலர் இருப்பதால், நாம் ஜெயிக்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும்.
கடுமையானதாக இருக்கும்
கவுதம், கருவம்பாளையம்:
புதிய அணி மட்டுமல்ல; அனைத்து அணிகளுக்கும், புதிய மைதானங்கள் சவாலானவை தான். ஒவ்வொரு பந்தும் வெவ்வேறு மாதிரி எழுகின்றன.
பாகிஸ்தானில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தும் சூப்பர் ஓவரில் தடுமாறியிருக்கிறது. டி-20 கிரிக்கெட்டை பொறுத்தவரை எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். புதிய அணிகள் கூட 'சூப்பர் 8' சுற்றை கடந்து, அடுத்த சுற்றுக்கு வரலாம்.
ஏற்கனவே, ஒரு போட்டியில் அமெரிக்காவுடன் தோல்வி அடைந்து விட்டதால், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் களமிறங்குகிறது, பாகிஸ்தான். பாகிஸ்தானுடான போட்டி என்பதால், நம் அணியும் வெற்றிக்கு போராடும். எனவே, இப்போட்டி கடுமையானதாக இருக்கும். நம் பவுலர் பும்ரா, அர்ஷ்தீப்சிங் கைகொடுக்கலாம்.
----
---