/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சூப்பர் - 8'ல் இந்தியா 'சூப்பராக' விளையாடி...
/
'சூப்பர் - 8'ல் இந்தியா 'சூப்பராக' விளையாடி...
ADDED : ஜூன் 16, 2024 12:46 AM

திருப்பூர்;உலக கோப்பைக்கான 'டி-20' போட்டியில், இந்தியா 'சூப்பர் 8'க்கு முன்னேறி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து முன்னேறி, கோப்பை வெல்ல வேண்டுமென, ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துள்ளது. 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன், 2ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் வென்று இந்தியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிரிவு ஏ வில் முன்னிலையில் உள்ள இந்தியா அணி இன்று (நேற்று) கனடாவை சந்தித்தது. ஜூன், 19 முதல், 25 வரை நடக்கவுள்ள சூப்பர் 8 சுற்றில் இந்தியா அணி எப்படி பணியாற்றினால், வெற்றி பெற முடியும் என திருப்பூரை சேர்ந்த கிரிக்கெட் பிரியர்களிடம் கேட்டோம்.
'இனிமேல் தான் ஆட்டமே'
லீக் போட்டிகளில் பவுலிங் கைகொடுத்ததால், தான் இந்திய அணி வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பும்ரா விக்கெட் திருப்பு முனையாக அமைந்தது. விராத் ேஹாலி - ரோகித் சர்மா ஓபனிங் பேட்டிங் மூன்று போட்டிகளாக சிறப்பாக இல்லை. கேப்டன் ேஹாலி வரிசையாக ஒன்று, நான்கு, டக்கவுட்டாகியுள்ளார். 120 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளதால், ஜோஸ்வாலை - ரோஹித் சர்மாவுடன் ஓபனிங் இறக்கலாம்.
இதன் மூலம், இரண்டு பேட்ஸ்மேன்களும் ரைட் ேஹண்டராக இல்லாமல், ஒரு ரைட், ஒரு லேப்ட் பேட்ஸ்மேன் கிடைப்பர்; எதிரணிக்கு நெருக்கடியாக அமையும். சூப்பர் 8 வரும் போட்டிகள் பலம் வாய்ந்த அணிகளுடன் என்பதால், முழுமையாக பவுலிங்கை மட்டும் நம்பி இறங்க முடியாது.
'ஒன்டவுன்' ேஹாலி, ரிஷாப் பன்ட், சூர்யகுமார், யாராவது ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம். இதுவரை ஆடியது ஆட்டம் இல்லை. இனிமேல் ஆட போவது தான் ஆட்டம். எனவே, ஆஸி., வெஸ்ட் இன்டீஸிடம் இருந்து பவுன்ஸ் எதிர்பார்க்கலாம். அதற்கேற்ப பேட்டிங் ஆர்டர் இருக்க வேண்டும். 180 ரன்களை கடந்தால் தான், நெருக்கடி இல்லாமல் பவுலிங் வீச முடியும்.
- விக்கி, அருள்புரம்
'ரன்ரேட் ரொம்ப முக்கியம்'
நியூலாந்து அணி தொடரில் இருந்து வெளியேற ஆப்கன் காரணம். மூன்றுக்கு மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது வரை அதிக ரன் (167), அதிக விக்கெட் (12), சிறப்பாக பந்து வீசி, (ஒன்பது ரன், ஐந்து விக்கெட்) பாராட்டை பெற்றுள்ளது.
இந்திய அணி - ஆப்கனுடன் மோதும் போட்டிக்கு எதிர்பார்ப்பது அதிகமாக உள்ளது. அனுபவம் வாய்ந்த ஓபனிங் இருந்த போதும், இந்திய அணி மூன்று போட்டியில் பங்கேற்றாலும், (120 ரன்களை கடந்து) பெரிய ஸ்கோரை எட்டவில்லை.
பாகிஸ்தானுடன், முதல் பத்து ஓவரில், 81 ரன் குவித்தாலும், அடுத்த, 38 ரன் எடுப்பதற்குள், ஏழு விக்கெட் சரிந்தது. இனி வரும் போட்டிகள் பலம் வாய்ந்த அணிகளுடன், அடுத்த சுற்றுக்கு அதிக ரன் ரேட்டுடன் முன்னேறினால், காலிறுதி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும். எனவே, பேட்ஸ்மேனுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.
- மதன், போயம்பாளையம்.
'பவர் பிளே'வில் 'பவர்' காட்டணும்!
முதல் 'பவர்பிளே' வில் ஆறு ஓவர்களுக்குள், 60 முதல், 70 ரன்களை இந்திய அணி குவிக்க வேண்டும். ஓபனிங் ரோஹித் - ேஹாலி விக்கெட் இழப்பு இல்லாமல்,பவர் பிளே கடந்து விட்டால், எளிதில் ரன் குவித்து விடலாம்.
ரன் அதிகம் இருந்தாலே போதும், நம் பவுலிங் சிறப்பாக இருப்பதால், வெற்றியை பவுலர்கள் உறுதி செய்து விடுவர். ஆஸி., இங்கிலாந்து அணியில், லெப்ட்ஹேண்ட் பேட்ஸ்மேன் நிறைய உள்ளனர். அவர்களுக்கு பந்து வீச ஏதுவாக, இரண்டு 'லெப்ட் ஆர்ம் ஸ்பின்னர்', தேவைப்படலாம்.
நடந்த முடிந்த போட்டிகளை பார்க்கும் போது, பெரிய மைதானங்களில் எளிதாக விளையாடிய மேற்கு இந்திய அணி, ஆஸி., அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று, அரையிறுதி வரை முன்னேற நிறைய வாய்ப்புள்ளது.
- பாலசரவணன், விஜயாபுரம்.
' பவுலிங்கால் வெற்றி உறுதியாகும்'
நியூயார்க் மைதானத்தில் நிலையால், நம் அணியின் 'டாப் ஆர்டர்' சரிவர விளையாட முடியவில்லை. அடுத்த சுற்று ஆட்டத்துக்காக கரீபியன் ஆடுகளங்களுக்கு செல்வதால், நிச்சயம் விராட் ஹோலி, ரோஹித் சர்மா பேட்டிங் மாறும். அதிக ரன் குவிப்பர். மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ் வலிமையாக உள்ளனர். ரவீந்திர ஜடேஜாவும் பழைய 'பார்முக்கு' திரும்ப வாய்ப்புள்ளது.
குல்தீப் யாதவ் இல்லாமலே பவுலிங் சிறப்பாக உள்ளது. அர்ஷ்தீப்சிங் உள்ளே வந்து நன்றாக விளையாடுகிறார். விக்கெட்டுக்கும் எடுத்துள்ளார். பவுலிங்கில், பும்ரே, சிராஜ் முழு பொறுப்பு எடுத்துக் கொள்கின்றனர். அதே நேரம், எதிரணிக்கு பேட்டிங் சாதகமாக உள்ள மைதானமாக இருந்தால், குல்தீப் யாதவ் வேண்டும்.
இந்திய அணி, இனி ஆப்கன், ஆஸி., உடன் விளையாடும் போட்டி கடினமாக இருக்கும். காரணம், இவர்கள் ஐ.பி.எல்., போட்டிகளில் நம் அணியின் அனைத்து வீரர்களின் ஆட்டத்தையும் பார்த்துள்ளனர். பலம், பலவீனம் அறிந்து வைத்திருப்பர். தொடர் துவங்கியது முதலே துவக்கம் முதலே ஆப்கன் அணி பேட்டிங், பவுலிங்கில் அசத்தி வருகிறது. ஓபனிங் பவுலர் பைசல்லா ஸ்விங்கில் அசத்தி, எதிரணியை தடுமாற செய்கிறார்.
மேற்கு இந்திய அணி பவுலிங் விட, பேட்டிங் சூப்பராக உள்ளது. இருப்பினும், மைதானத்தின் நிலை புரிந்து விளையாடுவதால், ஆஸி., அசத்தி வருகிறது. ஆஸி., இங்கிலாந்து, இந்தியா, ஆப்கன் அணிகள் அடுத்த சுற்று போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
- கார்த்திக், கல்லாங்காடு.