/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிட்ஷோ' கண்காட்சியில் நவீன தொழில்நுட்பம் மாற்றத்துக்கு தயாராகும் தொழில்துறையினர்
/
'நிட்ஷோ' கண்காட்சியில் நவீன தொழில்நுட்பம் மாற்றத்துக்கு தயாராகும் தொழில்துறையினர்
'நிட்ஷோ' கண்காட்சியில் நவீன தொழில்நுட்பம் மாற்றத்துக்கு தயாராகும் தொழில்துறையினர்
'நிட்ஷோ' கண்காட்சியில் நவீன தொழில்நுட்பம் மாற்றத்துக்கு தயாராகும் தொழில்துறையினர்
ADDED : மே 29, 2024 12:10 AM
திருப்பூர்;திருப்பூர் 'நிட்ஷோ' கண்காட்சியில், புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.
உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியை, ஒவ்வொரு தொழிலுக்கும் கொண்டு சேர்க்க, சர்வதேச கண்காட்சிகள் கைகொடுக்கின்றன. இந்தியாவை சேர்ந்த தொழில்துறையினர், வெளிநாடுகளுக்கு சென்று, கண்காட்சியை பார்வையிட வேண்டியிருந்தது.
தற்போது, தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து, நமது பகுதியில் சர்வதேச கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அவ்வகையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் போன்ற நாடுகள் பங்கேற்கும், 'நிட்ேஷா' கண்காட்சி, திருப்பூரில் நடத்தப்படுகிறது.
'நிட்டிங்', 'சாயமிடுதல்', பிரின்டிங் மற்றும் 'சூயிங்' பிரிவுகளில், அதிநவீன இயந்திரங்களை அறிமுகம் செய்வதில், 'நிட்ேஷா' கண்காட்சி முன்னோடியாக இருக்கிறது. வரும் ஆக. மாதம் 9 ம் தேதி துவங்கி, மூன்று நாட்களுக்கு தொழில்நுட்ப கண்காட்சி திருப்பூரில் நடக்க உள்ளது. காங்கயம் ரோடு, 'டாப் லைட்' மைதானத்தில், 500 ஸ்டால்களுடன், கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் துவங்கியுள்ளது.
இதுகுறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணா கூறியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச கண்காட்சியாக, 22வது நிட்ேஷா கண்காட்சி, ஆக., மாதம் நடக்க உள்ளது. புதிய 'பிராண்ட்'களும், அதிநவீன பிரின்டிங் தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்படும். புதிய 'கட்டிங்' இயந்திரம் உட்பட, நவீன இயந்திரங்கள், உதிரி பாகங்கள், இந்தியாவில் உற்பத்தியாகும் பேப்ரிக் ரகங்கள், சாயம் மற்றும் கெமிக்கல்களும் காட்சிப்படுத்தப்படும். உலகில் இதுவரை இல்லாத புதிய பிரின்டிங் தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்படும். இக்கண்காட்சி, ஆயத்த ஆடை தொழில்துறைக்கு திருப்புமுனையாக அமையும், என்றார்.