/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தை கொலை; வாலிபர் கைது தாயே நாடகமாடியது அம்பலம்
/
குழந்தை கொலை; வாலிபர் கைது தாயே நாடகமாடியது அம்பலம்
குழந்தை கொலை; வாலிபர் கைது தாயே நாடகமாடியது அம்பலம்
குழந்தை கொலை; வாலிபர் கைது தாயே நாடகமாடியது அம்பலம்
ADDED : மே 30, 2024 12:26 AM
திருப்பூர்: நான்கு வயது குழந்தையை தாக்கி கொன்றது தொடர்பாக, குழந்தையின் தாயுடன் வசித்துவந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர், மங்கலம் - இச்சிபட்டியை சேர்ந்தவர், பார்த்தசாரதி, 27. மானாமதுரையை சேர்ந்தவர் திவ்யா, 27. 'இன்ஸ்டாகிராம்' மூலம் அறிமுகமான இருவரும், ஒன்றாக வசித்து வந்தனர்.முதல் கணவரை விட்டு பிரிந்த திவ்யா, இருவருக்கும் பிறந்த, நான்கு வயது குழந்தை, பழனிவேல் ராஜனை தன்னுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த, 27ம் தேதி, இறைச்சி சாப்பிட்ட குழந்தை மயங்கி விழுந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, கோவை அரசு மருத்துவமனையில் திவ்யா அனுமதித்தார்.
மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்த குழந்தை இறந்து விட்டது. மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, குழந்தையின் தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்ததும், பார்த்தசாரதி, குழந்தையை பலமாக தாக்கியதில், படுகாயமடைந்த குழந்தை பரிதாபமாக இறந்ததும் தெரிய வந்தது. இதனை தெரிவித்தால், போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து விடுவார்கள் என்பதால், இறைச்சி தொண்டையில் சிக்கி விட்டதாக, தாயே நாடகமாடியது அம்பலமானது. போலீசார் பார்த்தசாரதியை கைது செய்தனர்.