/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பகுதி வார்டுகளில் பூத் சிலிப் வினியோகம் துவக்கம்
/
மாநகராட்சி பகுதி வார்டுகளில் பூத் சிலிப் வினியோகம் துவக்கம்
மாநகராட்சி பகுதி வார்டுகளில் பூத் சிலிப் வினியோகம் துவக்கம்
மாநகராட்சி பகுதி வார்டுகளில் பூத் சிலிப் வினியோகம் துவக்கம்
ADDED : ஏப் 02, 2024 11:39 PM

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி துவங்கப்பட்டது.
லோக்சபா தேர்தலுக்கான பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. சட்டசபை தொகுதி வாரியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு பூத் சிலிப் தயாராகி உள்ளது.
நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில், ஓட்டுச் சாவடி மண்டல அலுவலர்கள் மற்றும் ஓட்டுச் சாவடி நிலை மேற்பார்வையாளர்களுக்கு இவற்றை வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பவன்குமார் தலைமையில் நடந்தது.
உதவி கமிஷனர் வினோத், தேர்தல் துணை தாசில்தார் வசந்தா முன்னிலை வகித்தனர். வாக்காளர்களுக்கான பூத் சிலிப் மண்டல வாரியாக அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களும், நேரடியாக தங்கள் ஓட்டுச் சாவடியை சேர்ந்த வாக்காளர்களை தவறாமல் நேரில் சென்று சந்தித்து பூத் சிலிப்பை வழங்க வேண்டும்.
மொத்தமாக இவற்றை தனி நபர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கைகளில் கொடுத்துவிடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. அனைத்து வாக்காளர்களும் 100 சதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பூத் சிலிப் வினியோகம் முழுமையாக முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் தான் வாக்காளர்கள் எளிதாக ஓட்டுப் பதிவு செய்ய தயாராக வருவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பூத் சிலிப் வழங்கல்
நேற்று மாலை வாலிபாளையம், யுனிவர்சல் ரோடு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பூத் சிலிப் வழங்கும் பணியை, கமிஷனர் பவன்குமார் துவக்கி வைத்தார்.வாக்காளர்களிடம் இதை வழங்கி, அனைவரும் கட்டாயம் ஓட்டளித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

