/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் சுகாதார நிலையத்தில் துவக்கம்
/
ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் சுகாதார நிலையத்தில் துவக்கம்
ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் சுகாதார நிலையத்தில் துவக்கம்
ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் சுகாதார நிலையத்தில் துவக்கம்
ADDED : ஜூலை 27, 2024 12:29 AM

உடுமலை;உடுமலை அருகேயுள்ள அமராவதி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், உடுமலை தேஜஸ் ரோட்டரி கிளப் சார்பில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.
ரோட்டரி கிளப் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். டாக்டர் சக்தி வினோதினி ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விளக்கினார். முதல் மாதத்திற்கான ஊட்டச்சத்து பொருட்களை முன்னாள் தலைவர் ஸ்ரீகுமரன் வழங்கினார்.
திட்டத்தலைவர் லோகேஸ்வரி, செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் கணேஷ்குமார், அமராவதி நகர் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்பைச்சேர்ந்த கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.
அமராவதி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளுக்கு, அனைத்து நாட்களிலும், ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் வழங்கப்படும் என ரோட்டரி கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.