ADDED : மே 05, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணியாம்பூண்டி - முருகம்பாளையம் ரோட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. ஒருவரது இடத்தில் நன்கு வளர்ந்த வெள்ளை வேல மரம் ஒன்றும், நடுத்தர உயரத்தில் சில வேல மரங்களும் உள்ளன. அந்த பெரிய மரமும் இரு சிறிய மரங்களும் வேரோடு பிடுங்கி அகற்றப்பட்டுக் கிடந்தது.
அப்பகுதியில் புது கட்டடம் கட்டி வரும் தனி நபர் ஒருவர் தனது கட்டடம் மறைக்கப்படுவதால் இந்த மரங்களை வெட்டி அகற்றியதாக தெரிய வந்தது.புகாரின் பேரில் கணியாம்பூண்டி வி.ஏ.ஓ., விஜயகுமார் நேற்று அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இது குறித்து தாசில்தார் மூலம் சப் கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்பட்டு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.