/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுபாட்டிலில் பூச்சி 'குடி'மகன் அதிர்ச்சி
/
மதுபாட்டிலில் பூச்சி 'குடி'மகன் அதிர்ச்சி
ADDED : மே 11, 2024 12:12 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், உடுமலை ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் (எண்:1966) வாடிக்கையாளர் ஒருவர், 150 ரூபாய் கொடுத்து மது பாட்டில் ஒன்று வாங்கினார். பாட்டிலை திறக்க முற்பட்ட போது, உள்ளே பூச்சிகள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து பாட்டிலுடன் விற்பனையாளரை அணுகினார்.
சரியான பதில் அளிக்காத அவர், பாட்டிலை வாங்கி கொண்டு, வேறு மதுபாட்டிலை மாற்றி கொடுத்தார். இதுகுறித்து அந்நபர் கேட்டதற்கு, 'மதுபாட்டிலை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பி விடுவோம்,' என, அலட்சியமாக பதில் கூறியபடி வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
மதுபாட்டிலில் பூச்சி இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.