/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய ரேஷன் கடைதிறக்க வலியுறுத்தல்
/
புதிய ரேஷன் கடைதிறக்க வலியுறுத்தல்
ADDED : மே 10, 2024 12:59 AM
திருப்பூர்;'கணியாம்பூண்டி ஊராட்சி, முருகம்பாளையம் பகுதியில், புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை திறக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு தலைவர் ரஹீம் அங்குராஜ், மாவட்ட கலெக்டர், தாசில்தாருக்கு அனுப்பிய மனு:
அவிநாசி ஒன்றியம், கணியாம்பூண்டி ஊராட்சி, முருகம்பாளையத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
இக்கடை இரண்டாக பிரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டது. ஆனால், மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இக்கட்டடத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, தெரு விளக்கு மற்றும் சாக்கடை உள்ளிட்ட கட்டமைப்புகளை நிறைவேற்றி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.