/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் - உக்கடம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
/
பல்லடம் - உக்கடம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
பல்லடம் - உக்கடம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
பல்லடம் - உக்கடம் வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
ADDED : மே 29, 2024 12:26 AM
பல்லடம்;பல்லடம் - -உக்கடம் வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, தமிழக அரசு போக்குவரத்து கழகத்துக்கு பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பல்லடம் வட்டார பகுதியில் இருந்து, ஏராளமான அரசு தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள், பள்ளி கல்லுாரி மாணவ மாணவியர் உள்ளிட்டோர், தினசரி, திருப்பூர் கோவைக்கு சென்று வருகின்றனர். ஆனால், பல்லடம்- - கொச்சின் ரோட்டில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள், கோவை செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் கடைகள் உள்ளிட்டவை உள்ளன.
பல்வேறு பணிகளுக்காக பல்லடத்தில் இருந்து உக்கடம் செல்ல வேண்டும் என்றால், பல்லடம் வந்து, அதன்பின், இன்னொரு பஸ் மூலம் சிங்காநல்லுார் அல்லது காந்திபுரம் சென்று, அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் உக்கடம் செல்ல வேண்டும்.
இது தலையைச் சுற்றி மூக்கை தொடும் செயலாக உள்ளது. இதனால், தேவையற்ற நேர விரையம், பொருள் செலவு ஏற்படுகிறது. பல்லடம் -- கொச்சின் ரோடு வழியாக உக்கடத்துக்கு பஸ் இயக்குவதன் மூலம், இந்த வழித்தடத்தில் உள்ள சின்னகவுண்டம்பாளையம், கே.அய்யம்பாளையம், கரடிவாவி, செலக்கரச்சல், பாப்பம்பட்டி, செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.