/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு
/
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு
ADDED : மார் 13, 2025 06:57 AM

திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை செயல்பாடுகள் எப்படி என்பது குறித்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில், மருத்துவக்குழு அதிகாரிகள் நேற்று காலை, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர்.
வழங்கப்படும் சிகிச்சை, புறநோயாளிகள் பிரிவு செயல்பாடு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுத்தளம், சலவையகம், பிரேத பரிசோதனை கூடம், உணவு தயாரிப்பு கூடம், சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகிறதா, மின் வினியோகம், அவசர சிகிச்சை பிரிவு உட்பட வசதிகளை ஆய்வு செய்தனர்.
'திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வேலுார், நாமக்கல் மாவட்ட குழுவினர் அடுத்தடுத்து ஆய்வுகளை நடத்த உள்ளனர்,' என, திருப்பூர் அரசு மருத் துவக் கல்லுாரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.