/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுரை கோட்ட மேலாளர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு
/
மதுரை கோட்ட மேலாளர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு
ADDED : ஆக 07, 2024 10:58 PM

உடுமலை : உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை விரைந்து முடிக்க, கோட்ட மேலாளர் அறிவுறுத்தினார்.
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்தவா நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஸ்டேஷன் வளாகம், நடை மேடை, ஸ்டேஷன் மாஸ்டர் அறை என அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார்.
ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க கோட்ட மேலாளர் அறிவுறுத்தியதோடு, பயணிகள் ஓய்வறை, அமரும் இருக்கை, கழிப்பிடம் ஆகிய பகுதிளை துாய்மையாக பராமரிக்கவும், பயணியருக்கு உரிய வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.