ADDED : மே 10, 2024 01:10 AM
திருப்பூர்;கோவில்வழியில் திருப்பூரின் மூன்றாவது பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. கட்டுமானப் பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து, வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நொய்யல் ஆற்றின் கரை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக பிரதான கால்வாய்கள் வந்து இணையும் இடங்களில் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடக்கிறது. மணியகாரம் பாளையம் பகுதியில் நொய்யல் கரையில், 20 லட்சம் லிட்டர் திறன் கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதன் கட்டுமானப் பணியும் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சி தலைமை பொறியாளர் திருமாவளவன், துணை செயற் பொறியாளர் செல்வநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.