/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக வளர்ச்சி புதிய பணிகள் துவக்க தயாராக அறிவுறுத்தல்
/
ஊரக வளர்ச்சி புதிய பணிகள் துவக்க தயாராக அறிவுறுத்தல்
ஊரக வளர்ச்சி புதிய பணிகள் துவக்க தயாராக அறிவுறுத்தல்
ஊரக வளர்ச்சி புதிய பணிகள் துவக்க தயாராக அறிவுறுத்தல்
ADDED : பிப் 27, 2025 11:59 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவில் நடந்து வரும், ஊரக வளர்ச்சித்துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் மலர்விழி, செயற்பொறியாளர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தனர். ஒன்றியம் வாரியாக, ஊரக வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், பி.டி.ஓ.,க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இல்லாததால், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுக்க, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்து திட்ட பணிகளையும், குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும், விரைந்து முடிக்க வேண்டும். புதிய பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு, புதிய திட்ட பணிகளை துவக்கவும் தயாராக வேண்டுமென, பி.டி.ஓ.,க்களுக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.