/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னைக்கு தினமும் 100 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச அறிவுறுத்தல்
/
தென்னைக்கு தினமும் 100 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச அறிவுறுத்தல்
தென்னைக்கு தினமும் 100 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச அறிவுறுத்தல்
தென்னைக்கு தினமும் 100 லிட்டர் தண்ணீர் பாய்ச்ச அறிவுறுத்தல்
ADDED : மே 09, 2024 11:23 PM
உடுமலை:தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கையில், வேளாண்மை சார்ந்த சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தென்னை மர பராமரிப்பு பொறுத்தவரை, கோடை காலத்தில் பெறப்படும் மழைநீரை வீணாக்காமல், தென்னையை சுற்றி பாத்தி அமைத்து, அதில் சேமிக்கும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
தென்னையில், தேங்காய் உற்பத்தியை சரியான முறையில் பராமரிக்க, ஒரு மரத்துக்கு தினமும், 100 லிட்., தண்ணீர் பாய்ச்சுவதை உறுதிப்படுத்த வேண்டும். கால்நடை பராமரிப்பு பொறுத்தவரை, உயர்ந்து வரும் வெப்பநிலை மற்றும் குறைந்து வரும் காற்றின் ஈரப்பதம் காரணமாக, கால்நடைகளுக்கு வெப்ப அழற்சி ஏற்பட வாய்ப்புள்ளதால், கால்நடை மற்றும் கோழிகளுக்கு போதியளவு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.
தொடர்ந்து, வறண்ட வானிலையுடன், அதிக வெப்பமும் காணப்படுவதால், கோழி மற்றும் மாட்டு கொட்டகைகளின் மேல், தண்ணீர் தெளிப்பதன் வாயிலாக வெப்பத்தின் தாக்குதலை குறைக்க முடியும்.
நனைந்த கோணிப்பையை கூடாரத்தின் ஓரங்களில் தொங்க விடுவது, ஓரளவிற்கு நன்மை பயக்கும். வெப்ப அழற்சியை தவிர்க்க, அதிகாலை அல்லது மாலையில் கால் நடைகளுக்கு உணவளிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.