/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மிளகாய் சாகுபடியில் ஊடுபயிர் களைகளை கட்டுப்படுத்தும்
/
மிளகாய் சாகுபடியில் ஊடுபயிர் களைகளை கட்டுப்படுத்தும்
மிளகாய் சாகுபடியில் ஊடுபயிர் களைகளை கட்டுப்படுத்தும்
மிளகாய் சாகுபடியில் ஊடுபயிர் களைகளை கட்டுப்படுத்தும்
ADDED : பிப் 27, 2025 08:47 PM
உடுமலை,; மிளகாய் சாகுபடியில், களைகளை கட்டுப்படுத்தி, நோய்த்தாக்குதலை தவிர்க்க, உடுமலை பகுதி விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, பரவலாக மிளகாய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பருவமழைக்காலத்தில், களை மற்றும் நோய்க்கட்டுப்பாடு முறைகளை, விவசாயிகள் பின்பற்றாமல் விடுவதால், விளைச்சல் பாதிக்கிறது.
இந்நிலையில், மிளகாய் சாகுபடியில், ஊடுபயிர் முறையும் பல்வேறு நன்மைகளை தரும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
அத்துறையினர் கூறியதாவது:
மிளகாய் சாகுபடி செய்துள்ள நிலத்தில், ஊடுபயிராக கொத்தமல்லி அல்லது சின்ன வெங்காயத்தை, இரு வரிசைக்கு மத்தியில் வளர்க்கலாம்.
இதனால், களைகள் முளைப்பது கட்டுப்படுவதுடன், கூடுதல் வருவாயும் பெறலாம். பருவநிலை மாற்றத்தால், செடிகளை தேமல் நோய் தாக்கும் வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட செடிகள், கரும்பச்சை மற்றும் மஞ்சள் திட்டு உள்ள இலைகளுடன் வளர்ச்சி குறைந்திருக்கும்.
இந்நோய் பாதித்த செடிகளில் பூ, காய் பிடிக்காமல், மகசூல் பாதிக்கப்படும். இதை கட்டுப்படுத்த, ஐந்து வரிசை மிளகாய் பயிருக்கு, இரண்டு வரிசை சோளம் அல்லது மக்காச்சோளம் பயிரிட்டால், நோய் தாக்குதலைக் குறைக்கலாம்.
தழைச்சத்தை மூன்று முறை, ெஹக்டேருக்கு, 30 கிலோ அளவுக்கு, உரமாக இடவேண்டும். இத்தகைய வழிமுறைகளை பின்பற்றினால், மிளகாய் சாகுபடியில், பாதிப்பு இருக்காது. இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வழிகாட்டுதலை பின்பற்றி, விவசாயிகள் ஊடுபயிர் செய்து வருகின்றனர்.