/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாகுபடி ஆர்வம் ; தக்காளி நாற்று தட்டுப்பாடு
/
சாகுபடி ஆர்வம் ; தக்காளி நாற்று தட்டுப்பாடு
ADDED : ஜூன் 26, 2024 10:40 PM
பொங்கலுார் : தக்காளி நாற்றுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தக்காளி செடிகள் பெரும்பாலும் வெயில் மற்றும் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தக்காளி விலை தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தக்காளி கிலோ, 100 ரூபாய் வரை விலை போனது. தக்காளிக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியால் விவசாயிகளிடம் தக்காளி சாகுபடி செய்யும் ஆர்வம் அதிகரித்தது.
பல மாவட்டங்களில் கோடை மழை நன்றாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பல விவசாயிகள் நாற்றுப் பண்ணைகளில் தக்காளி நாற்றுகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக தக்காளி நாற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயிகள் தக்காளி நாற்று கிடைக்குமா என்று ஒவ்வொரு பண்ணையாக ஏறி இறங்குகின்றனர்.