/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சட்டப்பணி ஆணைக்குழுவில்பணியாற்ற விருப்பமா?
/
சட்டப்பணி ஆணைக்குழுவில்பணியாற்ற விருப்பமா?
ADDED : மே 10, 2024 11:52 PM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் மற்றும் ஊத்துக்குளி ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றில் பணியாற்ற 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பணியானது முற்றிலும் சேவை அடிப்படையிலானது. தற்காலிகமானது, நிரந்தரமானதல்ல. இதற்கான மாத சம்பளம் இல்லை. சேவைக்கு ஏற்ப கவுரவ சம்பளம் நாள் ஒன்றுக்கு, 500 ரூபாய் வழங்கப்படும். குறைந்த பட்சம் பள்ளி இறுதி வகுப்பு முடித்த, விரிவாக புரிந்து உணறும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள். அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவர்கள், சட்டம் பயிலும் மாணவர்கள், அரசியல் சாராத தொண்டு நிறுவன உறுப்பினர்கள், மகளிர் மற்றும் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம்.
வரும் 15 ம் தேதிக்குள் நேரிலோ தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைhttps://tiruppur.dcourts.gov.in/ என்ற இணைய தள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்கள், செயலாளர், திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், திருப்பூர், 4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.