/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திர கண்காட்சி சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கின்றன

ADDED : மே 12, 2024 11:57 PM

திருப்பூர்:சென்னையில் வரும் ஜூன் 14 முதல் 17-ம் தேதி வரை சர்வதேச பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திரக்கண்காட்சி நடக்கிறது.
தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சர்வதேச அளவிலான 'ஐ.பி.எல்.ஏ.எஸ்., - 2024' பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திர கண்காட்சி, ஜூன் 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை டிரேடு சென்டரில் நடக்கிறது. கண்காட்சி குறித்த விளக்க கூட்டம், திருப்பூரில் நடந்தது.
திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சேகர் பேசினார்.
கண்காட்சியில், சீனா, ஜப்பான், பிரிட்டன் உள்பட உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், அரங்கம் அமைக்கின்றன.
----
பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திர கண்காட்சி குறித்த விளக்க கூட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் சேகர் பேசினார். அருகில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.