/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலக்கிய களத்தின் இலக்கிய நிகழ்வு சிறுகதை நுால்கள் அறிமுகம்
/
இலக்கிய களத்தின் இலக்கிய நிகழ்வு சிறுகதை நுால்கள் அறிமுகம்
இலக்கிய களத்தின் இலக்கிய நிகழ்வு சிறுகதை நுால்கள் அறிமுகம்
இலக்கிய களத்தின் இலக்கிய நிகழ்வு சிறுகதை நுால்கள் அறிமுகம்
ADDED : செப் 17, 2024 04:44 AM
உடுமலை,: உடுமலை இலக்கிய களத்தின், 17வது இலக்கிய நிகழ்வில் சிறுகதை தொகுதி நுால்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இலக்கிய நிகழ்வில், உடுமலை அரசு கலை கல்லுாரி பேராசிரியர் வேலுமணி தலைமை வகித்து, மாக்சிம் கார்க்கியின், 'தாய்' நாவல் மற்றும் 'தாழிடப்பட்ட கதவுகள்,' சிறுகதை தொகுதி நுால்களை அறிமுகம் செய்து வைத்தார். ஆசிரியர் முனியப்பன் வரவேற்றார்.
எழுத்தாளர் கரீம் எழுதிய 'தாழிடப்பட்ட கதவுகள்' தொகுப்பிலுள்ள 'அன்புள்ள அத்தாவுக்கு' என்ற சிறுகதையை நாஜிரா மதிப்பாய்வு செய்து பேசினார். தொடர்ந்து சாகிதாபானு 'மெதோ கேள்வி' என்ற சிறுகதை குறித்து பேசினார்.
திறனாய்வாளர் சுடர்விழி 'தாய்' நாவலில், தொழிலாளர் இயக்கங்கள், விவசாயிகள் ஒற்றுமை ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டங்கள் குறித்து பேசினார்.
கோவை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் கரீம் தனது 'தாழிடப்பட்ட கதவுகள்' என்ற சிறுகதை தொகுப்பு குறித்து பேசினார்.
ஆசிரியர் செல்லத்துரை, தெய்வானை உள்ளிட்ட பலர் பேசினர். கவிஞர் இளையவன் சிவா நன்றி தெரிவித்தார்.