/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறு, சிறு தொழிலுக்கு முதலீட்டு மானியம்; தமிழக தொழில்முனைவோர் எதிர்பார்ப்பு
/
குறு, சிறு தொழிலுக்கு முதலீட்டு மானியம்; தமிழக தொழில்முனைவோர் எதிர்பார்ப்பு
குறு, சிறு தொழிலுக்கு முதலீட்டு மானியம்; தமிழக தொழில்முனைவோர் எதிர்பார்ப்பு
குறு, சிறு தொழிலுக்கு முதலீட்டு மானியம்; தமிழக தொழில்முனைவோர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 11, 2025 05:24 AM

திருப்பூர்: தமிழக அரசு, குறு, சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, தொழில்முனைவோர் எதிர்பார்க்கின்றனர்.
பீஹார், ஒடிசா, மகாராஷ்டிரா, ம.பி., குஜராத் போன்ற மாநிலங்கள், புதிய ஜவுளித்தொழில் துவங்க அழைப்பு விடுத்து வருகின்றன. தொழில்முனைவோருக்கு, ஐந்தாண்டு வரையிலான மின் கட்டண சலுகை, 6 சதவீதம் வரை முதலீட்டு மானியம், எளியமுறையில் நிலம் கையகப்படுத்தும் திட்டம், வேலை வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு கூடுதல் சலுகைள் வழங்கி ஊக்குவிக்கின்றன.
கடந்த ஆறு மாதங்களாக, இதுபோன்ற தொழில் பரிமாற்ற வர்த்தக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில், அதே தொழிலை துவக்குவதற்கான பூர்வாங்க பணிகளுக்கான செலவன், 40 சதவீதத்தில் வடமாநிலங்களில் தொழில்துவங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் துவங்கி, வேகமாக வளர்ந்து வரும் பல்வேறு மாநிலங்களில், தொழில்முனைவோர், இரட்டை மானியம் பெறும் வசதியும் உள்ளது. அதாவது, மத்தியஅரசு திட்டத்தில் மானியம் பெறுபவர்கள், மாநில அரசு திட்டங்களிலும் மானிய உதவி பெற தடையில்லை.
மத்திய அரசு, தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாக, 15 சதவீதம் வரை மானியம் வழங்கி ஊக்குவித்து வந்தது; கணிசமான தொகை மானியமாக கிடைத்ததால், தொழில் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்தது. தற்போது, மானிய திட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஜவுளி தொழில்முனைவோருக்கு, மத்திய அரசின் தொழில் முதலீட்டு மானிய உதவி தற்காலிகமாக கிடைப்பதில்லை. எனவே, தமிழக அரசு, முதலீட்டு மானிய உதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'மத்திய அரசின் முதலீட்டு மானிய திட்டங்கள் நிறுத்தப்பட்டதால், திருப்பூர் பின்னலாடை தொழில் மற்றும் சார்ந்துள்ள தொழிற்சாலைகளுக்கு மானிய உதவி கிடைப்பதில்லை. மற்ற மாநிலங்களை போல், தமிழக அரசு, முதலீட்டு மானிய சலுகை வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான், தொழில்கள் வேறு மாநிலங்களுக்கு நகர்ந்து செல்லாமல் தடுக்க முடியும். மானியம் இல்லாததால், புதிய தொழில்நுட்ப பகிர்வு எட்டாக்கனியமாக மாறிவிட்டது. அதிநவீன தொழில்நுட்பங்களை திருப்பூர் செயல்படுத்த, புதிய மானிய திட்டம் அவசியம் என்றனர்.