/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் என்று கூறி நகை பறித்த 8 பேர் 'இரானியா கேங்க்' சிக்கியது
/
போலீஸ் என்று கூறி நகை பறித்த 8 பேர் 'இரானியா கேங்க்' சிக்கியது
போலீஸ் என்று கூறி நகை பறித்த 8 பேர் 'இரானியா கேங்க்' சிக்கியது
போலீஸ் என்று கூறி நகை பறித்த 8 பேர் 'இரானியா கேங்க்' சிக்கியது
ADDED : மே 26, 2024 12:09 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை, சர்தார் வீதியை சேர்ந்த சோமந்தரம் மனைவி மீனா, 82. ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி, வீட்டிற்கு சென்ற போது, போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், 'ஏம்மா கழுத்தில் தங்க செயின் போட்டிருக்கிறாய்; திருடன் பார்த்தால் பிடுங்கிக்கொண்டு போவான்; நகையை கழற்றி கொடுங்கள் பர்சில் போட்டு தருகிறேன்' என, கூறியுள்ளனர்.
நம்பி, தான் அணிந்திருந்த, 9 சவரன் தாலிக்கொடியை கழற்றி கொடுத்துள்ளார். அவர்கள் வாங்கி ஒரு பர்சில் போட்டு தந்துள்ளனர். வீட்டிற்கு சென்று பார்த்த போது, நகைக்கு பதிலாக ஜல்லி கல் இருந்துள்ளது.
உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து, எட்டு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
உடுமலை பகுதிகளில் வயதான பெண்களை குறி வைத்து, போலீஸ் என கூறி நகை பறித்து வந்த, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த ஜாபர் உசேன், 34, இமாம் அலி, 28, உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியில் செயல்படும் 'இரானியா கேங்'கை சேர்ந்தவர்கள். தமிழகத்தில், பல இடங்களில் இதே போல, போலீஸ் என கூறி, பெண்களிடம் நகைகளை பறித்துள்ளனர்.
கும்பலில் இருவர் மட்டும் சென்று ஏமாற்றி, நகைகளை பறித்துக் கொண்டு, காரில் காத்திருப்பவர்களுடன் தப்பி சென்று விடுவர். போலீசிலும், 'சிசிடிவி' கேமராக்களிலும் சிக்காமல் இருக்க, அடிக்கடி உடைகளை மாற்றியும், வாகனங்களின் நம்பர் பிளேட்களை மாற்றியும் சுற்றி வந்ததால், இவர்களை பிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஒரு மூதாட்டியிடம் இதே போல் ஏமாற்ற முயற்சித்த போது, கையும், களவுமாக சிக்கியுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்தனர்.