/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளர் சங்கத் தலைவருக்கு 'இறையருட் கொடை சேயோன்' விருது
/
ஏற்றுமதியாளர் சங்கத் தலைவருக்கு 'இறையருட் கொடை சேயோன்' விருது
ஏற்றுமதியாளர் சங்கத் தலைவருக்கு 'இறையருட் கொடை சேயோன்' விருது
ஏற்றுமதியாளர் சங்கத் தலைவருக்கு 'இறையருட் கொடை சேயோன்' விருது
ADDED : ஆக 30, 2024 11:08 PM
திருப்பூர்:திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கத்தில் 'தி டிரைடன்ட்' என்ற முப்பெரும் விழா நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவரும், பழநி ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோவில் அறங்காவலருமான சுப்ரமணியனுக்கு, ஆன்மீகப் பங்களிப்பை பாராட்டி 'இறையருட் கொடை சேயோன்' என்ற வழங்கப்பட்டது. குளோபல் டிரான்ஸ்பிரின்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெரால்டுக்கு 'வாழ்வாதாரம் காக்கும் கொடையாளி' விருதும், அறந்தாங்கி நமது இல்லம் அறக்கட்டளை தலைமை சேவகர் சந்திரசேகருக்கு 'சேவை செம்மல் விருது'ம் வழங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு ரோட்டரி தலைவர் செல்லத்துரை தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன் அறிக்கை வாசித்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் சுரேஷ்பாபு, பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ரவி சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். சங்க நிர்வாகக்குழு தலைவர் பாலச்சந்தர், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை குழு தலைவர் மணிகண்டன் குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
---
படம் 3 காலம்
திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்க முப்பெரும் விழாவில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியனுக்கு 'இறையருட் கொடை சேயோன்' விருது வழங்கப்பட்டது.