/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரவுடிகள் மீது இரும்புக்கரம்: ஏ.டி.ஜி.பி., உத்தரவு
/
ரவுடிகள் மீது இரும்புக்கரம்: ஏ.டி.ஜி.பி., உத்தரவு
ADDED : ஆக 08, 2024 11:17 PM

திருப்பூர்;திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர், ஈரோடு மாவட்டம் மற்றும் திருப்பூர் மாநகர போலீஸ் அதிகாரிகளுடன் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம் திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி, கோவை சரக டி.ஐ.ஜி., சரவண சுந்தர், திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா, ஈரோடு எஸ்.பி., ஜவஹர் மற்றும் திருப்பூர், ஈரோடு டி.எஸ்.பி., - ஏ.டி.எஸ்.பி.,க்கள், திருப்பூர் மாநகர துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சட்டம் - ஒழுங்கு குறித்தும், மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஏ.டி.ஜி.பி., கேட்டறிந்தார். தொடர்ந்து, பொதுமக்கள் புகார் மீது உடனுக்குடன் விசாரணை செய்து தீர்வு காண வேண்டும்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திருப்பூரில் திறப்பு விழாவுக்கு காத்துள்ள குமார்நகரில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்தை ஏ.டி.ஜி.பி., பார்வையிட்டு, கட்டுமான பணிகள் குறித்து, விரைவில் திறப்பது குறித்து ஆலோசனை செய்தார்.