பல்லடம்;தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலா ளர் சங்கத் தலைவர் ராஜசேகர், தமிழக முதல்வருக்கு அனுப்பிய புகார் மனு:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய்உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களின் தேவைக்கு குறைவாகவே உள்ளன.
ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாத இறுதி நாட்கள் வரை அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்திருந்து வழங்க வேண்டும். பல ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, மூட்டை மூட்டையாக மாவு அரைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கப்படுகிறது.
அரசு துறை அதிகாரிகளும் இதுகுறித்து கண்டு கொள்வதில்லை. அதிகாரிகளின் ஆதரவுடன்தான் இது போன்ற முறைகேடுகள் நடக்கிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. மேலும், உரிய நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால், எண்ணற்ற ஏழை குடும்பத்தினர் பாதிக்கின்றனர்.
தமிழக முதல்வர், மாவட்ட ரீதியாக ரேஷன் கடைகளில் திடீர் சோதனை நடத்தி முறைகேடுகளை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.