/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தட்டுப்பாடின்றி பாசன நீர் தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்
/
தட்டுப்பாடின்றி பாசன நீர் தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்
தட்டுப்பாடின்றி பாசன நீர் தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்
தட்டுப்பாடின்றி பாசன நீர் தேவை; விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 17, 2024 10:08 PM

உடுமலை : இரண்டாம் சுற்று பாசனத்தில், கடைமடைக்கு போதிய தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை கால்வாய் பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, ஆக., 18ல், தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த மண்டலத்தில், உடுமலை தாலுகாவில், 12,645 ஏக்கர்; மடத்துக்குளம் தாலுகாவில், 6,150 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.
இரண்டாம் சுற்றுக்கு தற்போது கிளை கால்வாய் வாயிலாக, தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. உடுமலை கால்வாயில், இந்த பாசன நீரை பயன்படுத்தி விவசாயிகள், மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகளை மேற்கொண்டுள்ளனர்.
முதல் சுற்றில், பல்வேறு காரணங்களால், கடைமடை பாசன பகுதிக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. தற்போது சாகுபடியில், பயிர்கள் வளர்ச்சி தருணத்தில் உள்ளதால், கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது.
எனவே, உடுமலை கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுத்து, கடைமடை பகுதிக்கும் போதிய தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும்; நீர் தேவை அடிப்படையில் கூடுதல் நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.