/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தி.மு.க., ஆட்சி தேவையா? ஜெயராமன் விளாசல்
/
தி.மு.க., ஆட்சி தேவையா? ஜெயராமன் விளாசல்
ADDED : பிப் 26, 2025 11:50 PM

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொது கூட்டம் காந்தி நகரில் நடந்தது.காந்தி நகர் பகுதி செயலாளர் கருணாகரன், தலைமை வகித்தார். வார்டு செயலாளர் பிரகாஷ், முன்னிலை வகித்தார். ஈஸ்வரன், வரவேற்றார்.
மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
ஜெயலலிதா இல்லாத வேதனை இப்போது மக்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் உணவுப்பொருட்களின் விலை உயராமல் பார்த்து கொள்ளப்பட்டது. தற்போது, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த ஆட்சி உங்களுக்கு தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும்.
தி.மு.க., ஆட்சியில் திருப்பூருக்கென எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. வீடு, சொத்து, தொழில் ஆகிய வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும், 12 அமாவாசையில் இந்த தி.மு.க., ஆட்சி போய்விடும். பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ க்கள் விஜயகுமார், ஆனந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.