/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு ?
/
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு ?
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு ?
'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு ?
ADDED : மார் 07, 2025 03:37 AM
திருப்பூர்; நடப்பாண்டுக்கான 'நீட்' தேர்வு மே, 4ல் நடக்கவுள்ளது. கடந்த மாதம், 7ம் தேதிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
அறிவிப்பு வெளிவந்த போது, பிளஸ் 2 வகுப்புக்கு செய்முறை தேர்வு நடந்து கொண்டிருந்தது. தேர்வை எதிர்கொள்வதில் மாணவ, மாணவியர் பலர் கவனம் செலுத்தினர். இருப்பினும், சிலர் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
பிப்., மூன்றாவது வாரம் செய்முறைத்தேர்வு நிறைவடைந்தது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3 ம் தேதி துவங்கியது. வரும், 11ம் தேதி முதல் முக்கியத்தேர்வுகள் துவங்க உள்ளது. ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்றுடன் (7ம் தேதி) நள்ளிரவு12:00 மணியுடன் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிகிறது.
இன்னமும் பிளஸ் 2 முக்கிய பாடத் தேர்வுகள் துவங்காத நிலையில், மார்ச் 28 ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடப்பதால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'நீட்' தேர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், ''பொதுத்தேர்வு எழுதி வரும் பிளஸ் 2 மாணவர் வசதிக்காக 'நீட்' தேர்வு விண்ணப்பிக்க காலஅவகாசம் எப்போதும் நீட்டிக்கப்படும்.
இன்று நள்ளிரவுடன் அவகாசம் முடிவதாக இருந்தாலும், தேதியை நீட்டிக்கும் அறிவிப்பு நாளை (இன்று) வெளியாக வாய்ப்பு உள்ளது,'' என்றனர்.