ADDED : செப் 11, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட கோல்டன் நகர், கொங்கு நகர், தொட்டிபாளையம் பகுதியில், புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, குமார் நகரில் நடைபெற்றது.
வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் முத்து, ஹரிஹரசுதன், வேலுமணி முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், புதிய உறுப்பினர் அட்டை வழங்கினார்.
கடந்த லோக்சபா தேர்தலில் அதிக ஓட்டுகள் வாங்கிய பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் பாலு, பகுதி செயலாளர்கள் கருணாகரன், சுப்பு, வார்டு செயலாளர்கள் கனகராஜ், ரங்கசாமி, ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.