/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கல்
/
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கல்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கல்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கல்
ADDED : மே 10, 2024 01:59 AM

உடுமலை:பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே 6ம் தேதி வெளியிடப்பட்டன. தொடர்ந்து மாணவர்கள் கல்லுாரிகளில் விண்ணப்பிக்கத்துவங்கியுள்ளனர். நேற்று முதல் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.
உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன.
மாணவர்களின் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், தற்போதைய மாற்று சான்றிதழ் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விடைத்தாள் நகல் பெறுவதற்கும், மறுகூட்டல் செய்வதற்கும் விண்ணப்பிக்கும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன.