/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.20 லட்சம் செலவில் பூங்கா புதர்மண்டிக் கிடக்கும் அவலம்
/
ரூ.20 லட்சம் செலவில் பூங்கா புதர்மண்டிக் கிடக்கும் அவலம்
ரூ.20 லட்சம் செலவில் பூங்கா புதர்மண்டிக் கிடக்கும் அவலம்
ரூ.20 லட்சம் செலவில் பூங்கா புதர்மண்டிக் கிடக்கும் அவலம்
ADDED : ஜூலை 24, 2024 11:55 PM

திருப்பூர் : திருமுருகன்பூண்டி நகராட்சியில், 20 லட்சம் ரூபாய் செலவில் பொலிவூட்டப்பட்ட பூங்கா, கடந்த, 4 ஆண்டுகளாக புதர்மண்டிக் கிடக்கிறது.
திருமுருகன்பூண்டி நகராட்சி, 3வது வார்டு, வி.ஜி.வி., கார்டன் பகுதியில், 350 வீடுகள் உள்ளன. இங்குள்ள ரிசர்வ் சைட்டில், கடந்த, 2020-21ல், மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில், சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், நடைபயிற்சி மேற்கொள்ள தளம் என, பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
இப்பூங்கா, கடந்த, 4 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இல்லாமல், புதர்மண்டிக் கிடக்கிறது. பூங்கா அமைக்கப்பட்ட போது வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை ஓரத்தில் கிடக்கிறது.
இப்பூங்காவை பராமரித்து, குடியிருப்புவாசிகளின் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்ற, தொடர் கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இது குறித்து, திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில்,'ரிசர்வ் சைட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பராமரிக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கைக்கு நிர்வாகம் செவி சாய்க்காமல் இருப்பது, வருத்தமளிக்கிறது.
இதே போன்று பல பணிகள், நிலுவையில் உள்ளன. ரயில் பயணம் போன்று, நகராட்சி கமிஷனர் பணியில் அதிகாரிகள் நிலைத்து நிற்காமல், பணியிட மாற்றத்தில் சென்ற வண்ணமே உள்ளனர்.
இதனால், நிர்வாகம் சீராக இல்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறியுள்ளனர்.

