/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்நிலைகளில் தொடரும் உயிரிழப்பு எச்சரிக்கை ஏற்படுத்துவது அவசியம்
/
நீர்நிலைகளில் தொடரும் உயிரிழப்பு எச்சரிக்கை ஏற்படுத்துவது அவசியம்
நீர்நிலைகளில் தொடரும் உயிரிழப்பு எச்சரிக்கை ஏற்படுத்துவது அவசியம்
நீர்நிலைகளில் தொடரும் உயிரிழப்பு எச்சரிக்கை ஏற்படுத்துவது அவசியம்
ADDED : மே 23, 2024 11:28 PM
உடுமலை;மழையால் நிரம்பியுள்ள கிராம தடுப்பணை மற்றும் குட்டைகளில், மக்கள் குளிப்பதை தடுக்க, ஊராட்சிகள் வாயிலாக மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குடிமங்கலம் வட்டாரத்தில், கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது. அப்பகுதியிலுள்ள தடுப்பணை, குளம், குட்டைகளில் மழைக்குப்பிறகு நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நீர்நிலைகளில் போதிய விழிப்புணர்வு இல்லாமல், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் குளிக்கின்றனர். சேறும், சகதியுமாக உள்ள நீர் தேக்கத்தில், குளிக்கும் போது, விபத்துகள் ஏற்படுகிறது.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள், இளைஞர்கள் பொழுதுபோக்கும் வகையில், நீர்நிலைகளை தேடிச்செல்கின்றனர். சில சமயங்களில் இது அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது.
நேற்று முன்தினம், குடிமங்கலம் அருகே, லிங்கமநாயக்கன்புதுாரிலுள்ள குட்டையில் குளித்த போது, பொள்ளாச்சி கெங்கம்பாளையத்தை சேர்ந்த வினோத்குமார் (20) தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டனர். ஆண்டுதோறும், அப்பகுதியிலுள்ள குளம், குட்டை, தடுப்பணைகளில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கோடை விடுமுறை காலத்தில், நீர்நிலைகளில், இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக நீர்நிலைகளின் கரையில், எச்சரிக்கை பலகை வைப்பதுடன், விழிப்புணர் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.