ஐ.டி.ஐ., க்கு சுற்றுசுவர் இல்லை கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ஐ.டி.ஐ., க்கு சுற்றுசுவர் இல்லை கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ADDED : மே 05, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
உடுமலை: அரசு ஐ.டி.ஐ., வளாகத்துக்கு சுற்றுச்சுவர் கட்டி, சமூக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (ஐ.டி.ஐ.,), சில ஆண்டுகளுக்கு முன், ரூ. 5.56 கோடியில் நிரந்தர கட்டடம் அரசு கலைக்கல்லுாரி எதிரில் கட்டப்பட்டது.
தற்போது இம்மையத்தில், பல்வேறு பாடப்பிரிவுகளில், 150க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். வகுப்பறை, ஆய்வகம், தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் வளாகம் அமைந்துள்ளது. ஆனால், வளாகத்துக்கு சுற்றுச்சுவர் இல்லை.
அரசு கலைக்கல்லுாரி ரோட்டை ஒட்டி அமைந்துள்ள வளாகத்தில், இரவு நேரங்களில் மது பாட்டில்களை வீசிச்செல்கின்றனர். மாணவர்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. விரைவில், சுற்றுச்சுவர் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
