/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் ஸ்ரீராம் அகாடமி பள்ளி பொதுத்தேர்வில் அசத்தல்
/
ஜெய் ஸ்ரீராம் அகாடமி பள்ளி பொதுத்தேர்வில் அசத்தல்
ADDED : மே 11, 2024 12:30 AM

திருப்பூர்:திருப்பூர் - தாராபுரம் ரோடு, அவிநாசிபாளையத்திலுள்ள ஜெய்ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 21 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி நேத்ரா ஸ்ரீ 496 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இவர் பள்ளி அளவில் முதலிடமும், மாவட்டத்தில் மூன்றாமிடமும், மாநில அளவில் நான்காமிடமும் பெற்று சாதனை புரிந்துள்ளார். மாணவி ஹர்ணிகா, 492 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாமிடம், மாணவர் சம்பத், 489 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய, 19 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி அபிஸ்ரீ 586 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், தீபிகா 581 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மஞ்சு 564 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் தங்கராஜ், துணை தலைவர் முத்து அருண், பள்ளி முதல்வர்கள் கலைச் செல்வி, யமுனா தேவி, நிர்வாக அறங்காவலர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.