/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம மாணவரை தொழில்முனைவோராக உயர்த்தும் 'ஜெய் ஸ்ரீராம் இன்ஜி., கல்லுாரி'
/
கிராம மாணவரை தொழில்முனைவோராக உயர்த்தும் 'ஜெய் ஸ்ரீராம் இன்ஜி., கல்லுாரி'
கிராம மாணவரை தொழில்முனைவோராக உயர்த்தும் 'ஜெய் ஸ்ரீராம் இன்ஜி., கல்லுாரி'
கிராம மாணவரை தொழில்முனைவோராக உயர்த்தும் 'ஜெய் ஸ்ரீராம் இன்ஜி., கல்லுாரி'
ADDED : ஆக 09, 2024 02:35 AM

திருப்பூர்;திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள, ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியின் தலைவர் கோவிந்தசாமி அறிக்கை:
கல்லுாரியில், 2024-25 கல்வியாண்டில், பி.டெக்., இன்பர்மேஷன் டெக்னாலஜி என்ற புதிய பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. முக்கிய நோக்கம், கிராமப்புற மாணவர்களை பொறியாளர்கள் அல்லது தொழில் முனைவோராக மாற்றுவதே. கல்வியோடு ஒழுக்கம், நற்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன.மாணவர்களுக்கு, தொழிற்சாலைகளிலும் சிறப்பு வகுப்புகள் உண்டு. சிறந்த தொழில் சார்ந்த பயிற்சியுடன் பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது. கடந்தாண்டு தேர்வில், மாநில அளவில், 443 கல்லுாரிகளில், 55வது இடம், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளோம்; கல்விக்கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.
சிறந்த விடுதி மற்றும் விளையாட்டு அரங்க வசதியும் உள்ளது. படிக்கும் போதே தொழில் சார்ந்த நிறுவனங்களில் மாணவர்கள் பயிற்சி பெறுவதால், இறுதியாண்டு முடிக்கும் போதே வேலை வாய்ப்பும் பெறுகின்றனர். இன்ஜினியரிங் மற்றும் இயந்திரங்கள் உற்பத்தியில், 31 ஆண்டுகள், சர்வதேச அளவில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும், கோவை, பரணி ைஹட்ராலிக்ஸ் இந்தியா, இந்நிறுவனத்தின் சார்பு நிறுவனம். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த நுண்ணறிவு நேரடியாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.