/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'செயின்' திருடிய பெண்ணுக்கு சிறை
/
'செயின்' திருடிய பெண்ணுக்கு சிறை
ADDED : ஜூலை 16, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;கொடுவாயை சேர்ந்தவர் லட்சுமி, 47; இவர், கடந்த ஜன., 8ல், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு, டவுன் பஸ்சில் சென்றார்.
பஸ் ஸ்டாண்டில் இறங்கிய அணிந்திருந்த ஒரு பவுன் செயினை காணவில்லை.இதுதொடர்பாக, தெற்கு போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நாகர்கோவிலை சேர்ந்த அபிராமி, 30 என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருப்பூர் ஜே.எம்., -2 கோர்ட்டில் நடந்தது. செயினை திருடியதற்காக, அபிராமிக்கு, 3 ஆண்டு சிறையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பழனிக்குமார் உத்தரவிட்டார்.