/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜக்கம்மாள் கோவில் திருவிழா வரும் 30ல் திருவீதி உலா
/
ஜக்கம்மாள் கோவில் திருவிழா வரும் 30ல் திருவீதி உலா
ஜக்கம்மாள் கோவில் திருவிழா வரும் 30ல் திருவீதி உலா
ஜக்கம்மாள் கோவில் திருவிழா வரும் 30ல் திருவீதி உலா
ADDED : மே 27, 2024 11:42 PM
உடுமலை;உடுமலை ஜக்கம்மாள் கோவில் திருக்கல்யாண திருவிழா இன்று துவங்குகிறது.
உடுமலை இந்திராநகரில் செல்வவிநாயகர், ஜக்கம்மாள், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண திருவிழாவையொட்டி, வரும், 30ம் தேதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
திருவிழா இன்று காலை 8:00 மணிக்கு, திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க செல்லுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இன்று, இரவு 8:00 மணிக்கு, கும்மியாட்டமும், தொடர்ந்து, 10:00 மணிக்கு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை, (29ம் தேதி) காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தலும், காலை, 9:00 மணி முதல் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடக்கிறது.
அன்று மாலை, 3:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், வரும் 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு, வரும், 31ல், மகா அபிேஷகம், ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.