/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜன் தன் யோஜனா கணக்கு; நன்றி தெரிவிக்கும் வங்கிகள்
/
ஜன் தன் யோஜனா கணக்கு; நன்றி தெரிவிக்கும் வங்கிகள்
ADDED : ஆக 29, 2024 11:05 PM
பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தில், வங்கி கணக்கு துவங்கிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நன்றி தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன.
பிரதமர் மோடியின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக, ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்குகள் துவங்கும் ஜன் தன் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டம் செயல்பட துவங்கி, 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.இதில், தற்போது 53 கோடிக்கு மேற்பட்டோர் தங்களின் பாதுகாப்பான வங்கி கணக்குகளை துவங்கி, சேமிப்பு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் வங்கி கணக்கு துவங்குவோர் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஓவர் டிராப்ட் வசதி, இலவச ரூபே டெபிட் கார்டு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச விபத்து காப்பீடு பாலிசி ஆகியன உள்ளன.
இத்திட்டம் துவங்கி, 10 ஆண்டுகள் நிறவைடையும் நிலையில், வங்கிகள் இத்திட்டத்தில் தங்கள் கிளைகளில் வங்கி கணக்கு துவங்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன.அதில், ஒன்றிணைந்து நாட்டை வளப்படுத்துவோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---