/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண் குழந்தைகளின் பெற்றோரின் கடமை ஜெயந்தஸ்ரீ அறிவுரை
/
பெண் குழந்தைகளின் பெற்றோரின் கடமை ஜெயந்தஸ்ரீ அறிவுரை
பெண் குழந்தைகளின் பெற்றோரின் கடமை ஜெயந்தஸ்ரீ அறிவுரை
பெண் குழந்தைகளின் பெற்றோரின் கடமை ஜெயந்தஸ்ரீ அறிவுரை
ADDED : ஆக 09, 2024 02:28 AM

திருப்பூர்;''பெண் குழந்தைகள் பெற்றோரிடம் தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்'' என்று ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கூறினார்.
திருப்பூர், ஆஷர் நகரில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் பெண்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. வித்யா மந்திர், ஸ்ரீ மகேஷ் வித்யாலயா, கே.பி.கே., நேஷனல் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் புஷ்பலதா வரவேற்றார். வித்யா மந்திர் பள்ளி செயலாளர் விவேகானந்தன், நிர்வாக இயக்குனர் காயத்ரி, துணை முதல்வர் சித்ராதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆங்கில ஆசிரியர் ரோஷினி தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் 'தெளிந்த நல்லறிவு வேண்டும்' என்ற தலைப்பில் பேசியதாவது:
இன்றைய பெண் குழந்தைகள் கல்வியின் அவசியத்தை உணர வேண்டும். மொபைல் போன் போன்ற சமூக வலைதளங்களை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். பெண் குழந்தைகள் பெற்றோரிடம் தம் பிரச்னைகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். வளர் பருவ மாணவிகள் வழி தவறும் சூழ்நிலைகளில் அவர்களுக்கு ஆதரவாக நின்று நல்வாழ்க்கைக்கான நம்பிக்கையை பெற்றோர்கள் தர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
-----
வித்யா மந்திர் பள்ளியில் நடந்த பெண்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்(நடுவில்) பேசினார்.