/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளநிலை முதலாமாண்டு சேர்க்கை; நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு
/
இளநிலை முதலாமாண்டு சேர்க்கை; நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு
இளநிலை முதலாமாண்டு சேர்க்கை; நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு
இளநிலை முதலாமாண்டு சேர்க்கை; நாளை இறுதிக்கட்ட கலந்தாய்வு
ADDED : ஆக 06, 2024 09:55 PM
உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவில், 864 இடங்கள் உள்ளன. முதல் மூன்று கட்ட கலந்தாய்வில், 816 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதம், 48 இடங்கள் காலியாக உள்ளன.
மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நாளை (8ம் தேதி) காலை, 9:30 மணிக்கு நடக்கிறது.
கலந்தாய்வில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து பங்கேற்க இயலாதவர்கள், கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள், துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்று, புதிதாக ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் உட்பட கல்லுாரியில் சேர விருப்பமுள்ள அனைவரும் நாளை பங்கேற்கலாம்.
இதில், பங்கேற்க வரும் மாணவர்கள், அசல் சான்றிதழ்கள், மூன்று நகல்கள், உரிய கல்விக்கட்டணம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல், 5 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் உள்ளிட்டவை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
பெற்றோர் கட்டாயமாக கலந்தாய்விற்கு மாணவர்களுடன் வரவேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, கல்லுாரி இணையதளத்தை பார்வையிடலாம். இத்தகவலை கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.