ADDED : ஜூன் 07, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைவ சமயத்தில், சிவபெருமானை வழிபட்டு, எம்பெருமானின் திருவடியை அடைந்த 63 நாயன்மார்கள் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர். 63 நாயன்மார்களில் ஒருவரான, கழற்சிங்க நாயனாரின் குருபூஜை விழா, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், 63 நாயன்மார்கள் சன்னதியில் நடந்தது.
கழற்சிங்க நாயனார்க்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து, தீபராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா மற்றும் பூஜை ஏற்பாடுகளை, தேவேந்திர குல வேளாளர் அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டனர்.