/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கம்பன் விழா பேச்சுப்போட்டி
/
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கம்பன் விழா பேச்சுப்போட்டி
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கம்பன் விழா பேச்சுப்போட்டி
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கம்பன் விழா பேச்சுப்போட்டி
ADDED : ஜூன் 26, 2024 10:38 PM
திருப்பூர் : திருப்பூர் கம்பன் கழகம் சார்பில், 'கம்பன் விழா -2024' பேச்சுப்போட்டி, ஜூலை, 19ம் தேதி நடைபெற உள்ளது.
திருப்பூர் டவுன்ஹால் லயன்ஸ் கிளப் அரங்கில், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடக்கிறது. வரும், 19ம் தேதி மதியம் 2:00 மணிக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது.
'ராமனின் வீரம்' அல்லது 'அனுமன் துாது' என்ற தலைப்பில், ஐந்து நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும்; பள்ளிக்கு ஒருவர் மட்டுமே பங்கற்க லாம். முதல் பரிசாக, 2,000 ரூபாய், 2வது பரிசாக 1,500 ரூபாய், மூன்றாவது பரிசாக, 1,000 ரூபாய் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக, தலா மூன்று பேருக்கு, 300 ரூபாய் வழங்கப்படும்.
ஆசிரிய, ஆசிரியைகள் போட்டியில், 'அறம் வெல்லும் - பாவம் தோற்கும்' என்ற தலைப்பில், ஆறு நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும்; பள்ளிக்கு இருவர் மட்டும் பங்கேற்கலாம்.
முதல் பரிசாக, 3,000 ரூபாய், 2வது பரிசாக, 2,000; 3வது பரிசாக,1,000 ரூபாய் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக, தலா மூன்று பேருக்கு, 500 ரூபாய் வழங்கப்படும்.
திருப்பூர் கம்பன் கழக அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில்,''பங்கேற்க விரும்புவோர், ஜூலை 15ம் தேதிக்குள், 93456 51066, 98424 58906 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்களுக்கு, பெயரை பதிவு செய்து கொள்ளலாம்,'' என்றார்.