/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருப்பராயன் கோவில் கும்பாபிேஷக விழா
/
கருப்பராயன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஆக 24, 2024 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை தில்லை நகர் எல்லை கருப்பராயன் கன்னிமார் கோவிலில் கும்பாபிேஷக விழாவில், நேற்று முன்தினம் காலையில் கணபதி ேஹாமம், நவகிரக ேஹாமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன.
மாலையில் முதற்கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை, அங்குரார்ப்பனம், காப்புகட்டுதல், கும்பஸ்தாபனம், வேதிகார்ச்சனை, துவாரபூஜை, முதற்கால வேள்வி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ரக் ஷாபந்தனம், நாடிசந்தானம், மகாபூர்ணாஹுதி, மகா தீபாராதனை, சக்தி கலசங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 8:30 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.