/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரள எக்ஸ்பிரஸ் திருப்பதி செல்லாது
/
கேரள எக்ஸ்பிரஸ் திருப்பதி செல்லாது
ADDED : மே 26, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : 'புதுடில்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் கேரள எக்ஸ்பிரஸ் வரும், 28ம் தேதி, திருப்பதி செல்லாது,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் காட்பாடி - ஆந்திர மாநிலம் சித்துார் வழித்தடத்தில், பொம்மசமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே மேம்பாட்டு பணி நடக்கிறது.
இதனால், புதுடில்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் கேரள எக்ஸ்பிரஸ் (எண்:12626) வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
இந்த ரயில் வரும் 28ம் தேதி குடூரில் இருந்து ரேணிகுண்டா, மேல்பாக்கம் வழியாக காட்பாடி வந்தடையும். திருப்பதி மற்றும் சித்துார் ஸ்டேஷன் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.