/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயிலில் கஞ்சா கடத்தல் கேரள வாலிபர் கைது
/
ரயிலில் கஞ்சா கடத்தல் கேரள வாலிபர் கைது
ADDED : மார் 08, 2025 11:24 PM
திருப்பூர்: தன்பாத் எக்ஸ்பிரஸில் கஞ்சா கடத்தி வந்த கேரளா வாலிபரை கைது செய்து, பத்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்களின் புழக்கத்தை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களை தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இச்சூழலில், ஜார்கண்டில் இருந்து கேரளா செல்ல கூடிய தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வருவது குறித்து போலீசாருக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக திருப்பூருக்கு ரயில் வந்த பின், அதிலிருந்து இறங்கி வந்த சந்தேகப்படும் விதமான நபர்களை நோட்டமிட்டனர்.
தொடர்ந்து, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ரெனால்டு, 36 என்பவரிடம்விசாரித்தனர்.
ஒடிசாவில் இருந்து கிலோ, ஆயிரம் ரூபாய் வீதம், பத்து கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய வாங்கி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த திருப்பூர் வடக்கு போலீசார், பத்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.