/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.எம்.சி., பப்ளிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா
/
கே.எம்.சி., பப்ளிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா
ADDED : செப் 01, 2024 02:33 AM

திருப்பூர்;பெருமாநல்லுார், கே.எம்.சி., பப்ளிக் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். தாளாளர் மனோகரன் தலைமை தாங்கினார். பள்ளி விளையாட்டு அணி மாணவர் தலைவர் மதியொளி வரவேற்றார்.
மாவட்ட அரசு வழக்கறிஞர் கனகசபாபதி முதன்மை விருந்தினராகவும், பெருமாநல்லுார் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று மாணவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சீனிவாசன், தலைமைச்செயல் அதிகாரி சுவஸ்திகா உள்ளிட்டோர் பேசினார். பெற்றோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.