ADDED : ஆக 09, 2024 02:05 AM
திருப்பூர்;உலகளாவிய பின்னலாடை உற்பத்தி தொழில்நுட்ப இயந்திரங்களின் அணிவகுப்புடன், இன்று முதல் 3 நாள், திருப்பூரில் 'நிட்ேஷா' நடக்கிறது..
திருப்பூர் - காங்கயம் ரோட்டிலுள்ள 'டாப் லைட்' வளாகத்தில், 22வது நிட்ஷோ கண்காட்சி இன்று துவங்குகிறது. காலையில் நடைபெறும் துவக்க விழாவுக்கு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் ஈஸ்வரன் தலைமை வகிக்கிறார். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பிரமாண்டமான அரங்குகளில், ஐரோப்பா, அமெரிக்கா, கொரியா, சீனா, தைவான், போர்ச்சுக்கல் என, உலகளாவிய நாடுகளின் 400 முன்னணி நிறுவன தயாரிப்பிலான ஆடை உற்பத்தி இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
புதுமை புகுத்தப்பட்ட நிட்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல் மெஷின், எலாஸ்டிக் உற்பத்தி, பேக்கிங் உள்பட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் நவீன மயமாக்கலுக்கு கைகொடுக்கும் அனைத்து இயந்திரங்களும் ஓரிடத்தில் சங்கமித்துள்ளன. சாயங்கள், மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு தேவையான நுால் மற்றும் துணி ரகங்கள், ஆடை உற்பத்தி உதிரி பாகங்களும் பிரத்யேக அரங்குகளில் இடம்பெறுகின்றன.
இன்று துவங்கும் கண்காட்சி, வரும், 11ம் தேதி வரை மூன்று நாள் நடைபெறுகிறது. திருப்பூர் உள்பட தமிழகம் மட்டுமின்றி, நாட ுமுழுவதும் உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் கண்காட்சியை பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.