/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீர் வரிசையுடன் திருக்கல்யாணம்: மாரியம்மன் கோவிலில் கோலாகலம்
/
சீர் வரிசையுடன் திருக்கல்யாணம்: மாரியம்மன் கோவிலில் கோலாகலம்
சீர் வரிசையுடன் திருக்கல்யாணம்: மாரியம்மன் கோவிலில் கோலாகலம்
சீர் வரிசையுடன் திருக்கல்யாணம்: மாரியம்மன் கோவிலில் கோலாகலம்
ADDED : மே 03, 2024 12:57 AM

திருப்பூர்:சீர் வரிசைகளுடன், மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர், தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு, காட்டு வளவு, வேலன் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில், 27ம் ஆண்டு பொங்கல் விழா, கடந்த, 28ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம், மாவிளக்கு ஊர்வலத்தை தொடர்ந்து, பொங்கல் வைக்கப்பட்டது. அதையொட்டி, மாரியம்மன், சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார்.
நான்காவது நாளான நேற்று காலை, ராஜகணபதி கோவிலிலிருந்து, மேளதாளம் இசை முழங்க, சீர்வரிசை தட்டுக்கள், மாரியம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் ஸ்ரீகாமாட்சிதாச சுவாமி தலைமையில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள், திருக்கல்யாணத்தை தரிசித்து பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், இன்று இரவு, 8:00 மணிக்கு மாரியம்மன் திருவீதியுலா, நாளை காலை, 7:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை, மஞ்சள் நீராடுதலுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.