/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.எஸ்.சி., பள்ளி வீதியில் வாகன நெரிசலால் அவதி
/
கே.எஸ்.சி., பள்ளி வீதியில் வாகன நெரிசலால் அவதி
ADDED : மே 03, 2024 12:40 AM

திருப்பூர்;திருப்பூர் தாராபுரம் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, பழைய மார்க்கெட் வீதி ஆகிய முக்கிய ரோடுகளை இணைக்கும் வகையில், கே.எஸ்.சி., பள்ளி வீதி உள்ளது. கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்துபுதுார் நடுநிலைப் பள்ளி மற்றும் இரு தனியார் பள்ளிகள் இதே பகுதியில் உள்ளன.
வர்த்தக நிறுவனங்கள், மொத்த விற்பனை கடைகள், பழ மண்டிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன. விஸ்வேஸ்வரர் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், டவுன் மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், பெரிய பள்ளி வாசல் செல்லும் வழியாகவும் இந்த வீதி உள்ளது.
இந்த ரோட்டில் அதிகாலை முதல் நள்ளிரவு வரையும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர் வாகனங்கள், சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் எந்நேரமும் கடுமையான போக்குவரத்து காணப்படும்.
இதில் பலரும் தங்கள் வாகனங்களை பொறுப்பற்ற முறையில் பார்க்கிங் செய்வது, சரக்கு இறக்கும் வாகனங்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெருக்கடியும், வாகன நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, கனரக வாகனங்கள் செல்ல குறிப்பிட்ட நேரம் தடை விதிப்பது; வாகக பார்க்கிங்கை முறைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.